சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து கிராம் ஒன்று ரூ.5,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற, இறக்கத்துடனே காணப்பட்டு வருகிறது. கடந்த மாதம் முதல் தங்கம் விலை உயர்வையே சந்தித்து வருகிறது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.41,000, ரூ.42,000, ரூ.43,000 என்ற நிலையை கடந்து இருந்தது.
பிப்ரவரி 1-ம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. பிப்ரவரி 2ம் தேதி தங்கம் சவரன் ஒன்றுக்கு ரூ.720 அதிகரித்து ரூ.44,040-க்கு விற்பனையானது.
இந்நிலையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சற்று குறைதுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.42,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,250க்கு விற்கபடுகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசுகள் குறைந்து ரூ.71.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.








