இலவசங்கள் நமது வாழ்வோடு ஒன்றிய வார்த்தை, எதில் இலவசம், எங்கு இலவசம் என தேடி தேடி செல்லும் பழக்கம் நமக்கு உண்டு. அது ஸ்டிக்கராக இருந்தாலும் சரி, சோப்பு டப்பாவாக இருந்தாலும் சரி.
நண்பன் திரைப்படத்தில் அடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஜீவாவிடம், விஜய் எல்லாமே “FREE.. FREE..” என சொல்லுவார். அது என்ன தான் சென்டிமெண்ட் காட்சியாக இருந்தாலும் நமக்கு அது சிரிப்பலைகளை கொடுக்கும். எல்லாவற்றையும் மிஞ்சி தற்பொழுது வைரமே இலவசமாக கிடைக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா. ஆம் நீங்கள் படித்தது உண்மை தான். வைரம் தான் இலவசம். அது என்ன ? எப்படி என்று இப்பொழுது பார்க்கலாம்.
வடஅமெரிக்காவில் இருக்கும் 2-வது நீளமான மிஸிஸிப்பி நதிக்கரையில் அமைந்திருக்கும் மாநிலமே அர்கன்சாஸ் (Arkansas). அங்கு மர்ஃபீஸ் பரா எனும் இடத்தில் மட்டுமே உலோகம் இருக்கும். மக்கள் யார் வெண்டுமானாலும் வந்து அவர்களுக்கு கிடைக்கும் வைரங்களை கிள்ளி அல்ல அள்ளி செல்லலாம். ஆம், 37 ஏக்கர் வயலில், எரிமலை குழம்புகளால் அரிக்கப்பட்ட மேற்பரப்பு அது, பல்வேறு வகையான பாறைகள், தாதுக்கள் மற்றும் ரத்தினக் கற்களும் அங்கு கிடைக்கும். அதற்காகவே மக்கள் கூட்டம் அங்கு செல்கிறது.
மேலும் அங்கு நாம் கண்டுபிடிக்கும் பாறைகள், கனிமங்களை நாமே எடுத்து செல்லலாம். அங்கு வைரங்களை தோண்ட நாம் நமது சொந்த உபகரணங்களை கொண்டு வரலாம். ஆனால் அங்கு தான் TWIST உள்ளது. பேட்டரி அல்லது மோட்டார் மூலம் இயங்கும் கருவிகள் அனுமதிக்கபடாது அல்லது பூங்கா நிர்வாகத்தின் கருவிகளை வாடகைக்கு எடுத்து கொள்ளலாம்.
இந்த வைர சுரங்க பூங்காவானது ஆர்கனஸ் மாகானத்தின் மாநில பூங்காவாக அதிகாரபூர்வமாக 1972-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட பின், இதுவரை 35,000 வைரங்கள் அங்கு வரும் மக்களால் கண்டறியபட்டுள்ளது. அதில் இன்று வரை பிரபலமானது என்றால் 1924-ம் ஆண்டு John Huddleston எனும் விவசாயி கண்டுபிடித்த வைரமே. அதன் இன்றைய விலை 1,50,000 US டாலர்கள், அதாவது இன்றைய இந்திய மதிப்பு படி ரூ.1.23 கோடி ஆகும்.
தற்பொது அந்த வைரம் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் உள்ளது. 1917-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட 17.86 காரட் உள்ள YELLOW ARKANSAS எனப்படும் வைரத்துடன் வைக்கப்பட்டுள்ளது.
எல்லாம் சரி, அந்த இடத்துக்கு எப்படி போவது ?, சென்னையிலிருந்து LITTLE ROCK விமான நிலையதிற்கு போக வேண்டும். போவதற்கு மட்டும் டிக்கெட் விலை 1,75,411 ருபாய்.
ஆண்ட்ரு, நியூஸ் 7 தமிழ்










