ஆயுத பூஜையான இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.56,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த 4 நாட்களாக குறைந்து வந்தநிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று (அக்.10) ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.56,200க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.7,025க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் விஷேஷ தினமான இன்று கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,095க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.56,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.102க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,02,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.







