வேட்டையன் VS கோட் | முதல் நாள் #boxoffice வசூல் வித்தியாசம்…

விஜய் நடித்த கோட் திரைப்படத்தை விட ரஜினிகாந்த்தின் வேட்டையன் குறைவான அளவே முதல் நாளில் வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் நேற்று (அக்.10)…

விஜய் நடித்த கோட் திரைப்படத்தை விட ரஜினிகாந்த்தின் வேட்டையன் குறைவான அளவே முதல் நாளில் வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் நேற்று (அக்.10) வெளியானது. ஜெயிலர் படத்திற்குப் பின் ரஜினிகாந்த் நடித்த படமென்பதால் ஆரம்பம் முதலே வேட்டையன் மேல் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில், முதல்நாளில் வேட்டையன் ரூ. 30 கோடி வசூலித்துள்ளதாக தகவல். ஹிந்தியில் ரூ. 6 லட்சம் மட்டுமே வசூலாகியுள்ளது.

கோட் திரைப்படம் முதல்நாளில் ரூ.44 கோடியும் ஜெயிலர் திரைப்படம் முதல்நாளில் ரூ. 48.35 கோடியும் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. தமிழில் ரூ.26.15 கோடி, தெலுங்கில் ரூ.3.2 கோடியும் வசூலித்துள்ளது வேட்டையன் திரைப்படம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.