ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.65ஆயிரத்து 880க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது.

அதனை தொடர்ந்து நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கடந்த 21ம் தேதி தங்கம் விலை 60 ஆயிரத்தை கடந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர் படிப்படியாக உயர்ந்து தங்கம் விலை 64 ஆயிரத்தை தொட்டது. கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது.

அந்த வகையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.65ஆயிரத்து 560-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 235-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்து 880க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும், பார் வெள்ளி ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

 

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.