தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.28 உயர்வு; சவரன் ரூ.5,580-க்கு விற்பனை!

கடந்த சில தினங்களாக ஆபரண தங்கத்தின் விலை தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து  வந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.224  உயர்ந்துள்ளது. ஒரு நாட்டின் தங்கத்தின் கையிருப்பை வைத்து தான் அந்நாட்டின் செல்வாக்கு…

கடந்த சில தினங்களாக ஆபரண தங்கத்தின் விலை தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து  வந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.224  உயர்ந்துள்ளது.

ஒரு நாட்டின் தங்கத்தின் கையிருப்பை வைத்து தான் அந்நாட்டின் செல்வாக்கு ஒரு நாட்டின் தங்கத்தின் கையிருப்பை வைத்து தான் அந்நாட்டின் செல்வாக்கு மதிப்பிடப்படுகிறது. பணவீக்க உயர்வுக்கும் தங்கத்தின் மீதான முதலீடு தான் முக்கிய காரணமாகும். பாதுகாப்பு மற்றும் லாபகரமான முதலீடாக தங்கம் இருப்பதால் சாமானியர்கள் முதல் பங்குச்சந்தை வரை பெரும்பாலானோர் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம்.

இந்த நிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 224 ரூபாய் அதிகரித்து, 44 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 580 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.