நெய்வேலி என்.எல்.சி நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சுரங்கம் மற்றும் அனல் மின் நிலையங்களில் 10,000க்கும் அதிகமான ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் இவர்கள் ரோஸ்கர் மேலா திட்டத்தின் படி அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் பணி நிரந்தரம் செய்யும் வரை மாத ஊதியம் 50000 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் வழங்கி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் ஏற்படவில்லை. இதனையடுத்து நேற்று இரவு முதல் நெய்வேலி என்எல்சி டவுன்ஷிப் பகுதியில் உள்ள நேரு சிலை அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் கூடுதல் போலீஸ் போடப்பட்டுள்ளது.







