வைபவ் சூரியவன்ஷிக்கு ”பால புரஸ்கார்” விருது வழங்கிய குடியரசுத் தலைவர்…!

இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கு பால புரஸ்கார் விருது வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கௌரவித்தார்.

கலை, அறிவியல், சமூக சேவைகள், விளையாட்டு, உள்ளடக்கிய ஏழு பிரிவுகளில் கீழ் சாதனை புரிந்த 5 முதல் 18 வயதுக்குளற்பட்ட சிறார்களுக்கு ஆண்டுதோறும் பால புரஸ்கார் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

அதன் படி இந்த ஆண்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த சிறார்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிரதமரின் ராஷ்ட்ரீய பால புரஸ்கார் விருதை வழங்கினார். ராஷ்டிரபதி பவனில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்ற  இவ்விழாவில்  இந்திய அணியின் இளம்வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பால புரஸ்கார் விருது வழங்கி கௌரவித்தார்.

இந்தியாவின் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் வைபவ் சூரியவன்ஷி. சிறுவயது முதலே தந்தையிடம் கிரிக்கெட் பயிற்சி பெற்ற இவர், 12 வயதில் பீகாரின் 19 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடினார்.

தொடர்ந்து அவர், 2024-இல், மும்பைக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை போட்டியில் பீகார் அணிக்காக தனது முதல் தரப் போட்டியில் அறிமுகமானார். தனது 13 -ஆம் வயதில் ஐபிஎல்-லில் அறிமுகமான சூர்யவன்ஷி 2025 ஆம் ஆண்டு  ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.