தமிழகம் செய்திகள் வேண்டாம் போதை

மது குடிப்போர் அட்டகாசத்தை குறைக்க கடவுளை களம் இறக்கிய மக்கள்!

போடி அருகே டாஸ்மாக் கடை அருகே முருகன் கோயில் அமைய உள்ளதால்  அப்பகுதியைச் சுற்றியுள்ள குடியிருப்புவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .


தேனி மாவட்டம் போடி அருகே மேல சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பங்காரு
நாயக்கர் காலனியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். 

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள்
உள்ளிட்டோர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளனர். இந்தநிலையில், மதுபானக் கடைக்கு முன்பு உள்ள இடத்தில் முருகன் கோயிலை நிர்மாணிக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் அந்த மதுபானக் கடை இடமாற்றம் செய்யப்படும் என்று மக்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர். கோயில் அமைய உள்ள 7 சென்ட் இடத்தை போடியைச் சேர்ந்த வியாபாரி முருகேசன் என்பவர் பழனி பாதயாத்திரை குழுவிற்கு தானமாக வழங்கியுள்ளர். தற்போது திருவாசகம் முன்னேறுதல் நிகழ்ச்சியினை நடத்தி விரைவில் கோயிலுக்கான பூமி பூஜையினை நடத்த உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்., 

—ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னை கட்டட விபத்து வழக்கு ; மேலும் ஒருவர் கைது

Web Editor

சினிமா பாணியில் சித்தப்பாவையே கடத்தி பணம் கேட்டு மிரட்டியவர் கைது!

Halley Karthik

பொதுக்குழுவிற்கு அழைப்பு விடுத்த தலைமை கழக நிர்வாகிகள்: அதிமுக வரலாற்றில் புதிய திருப்பம்

Web Editor