முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நாங்கள் செல்லும் பாதை பெரியார் பாதை தான்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

நாங்கள் செல்லும் பாதை பெரியார் பாதை தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

பெரியாரின் 144வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் சிறுகனூரில் 30 ஏக்கரில் பெரியார் உலகம் அமைக்கப்பட உள்ளது. அப்பகுதியில் பெரியார் ஆய்வகம் – பயிலகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவை சென்னை பெரியார் திடலில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஆசிரியர் வீரமணி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், அமைச்சர்கள் சேகர் பாபு, எ.வ.வேலு, செஞ்சிமஸ்தான், மு.நாசர், கே.என்.நேரு, மேயர் பிரியா, துணை மேயர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், பெரியார் திடலுக்கு வந்துள்ளேன் என்று சொன்னால், நான் என் தாய் வீட்டிற்கு வந்துள்ளேன் என்று அர்த்தம். தாய் வீட்டுக்கு மகன் வருவதில் ஆச்சரியம் இல்லை. பெரியார் திடல் வந்தாலே ஒரு புத்துணர்சி பெறுகிறது. நாங்களும் இந்த வீட்டிற்கு உரியவர்கள். தமிழ்நாடு சமூக நீதிக்கு மட்டும் இல்லை, இந்திய சமூக நீதிக்கே தலமையகம் பெரியார் திடல்.

தந்தை பெரியார் உருவாக்கியது பெரியார் திடல், ஆசிரியர் வீரமணி உருவாக்கியது பெரியார் உலகம். இதில் பங்கு கொண்டதற்கு பெருமை கொள்கிறேன். பெரியார் வாழும் காலம் எல்லாம் என் பெயரும் நிலைத்து இருக்கும் என்று பெருமை கொள்கிறேன். நாங்கள் செல்லும் பாதை பெரியார் பாதை தான் என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புதிய பெண் தொழில் முனைவோருக்கு அதிக வாய்ப்பு- மத்தியமைச்சர்

G SaravanaKumar

திக்குமுக்காடும் திருப்பூர்-நியூஸ்7 தமிழ் கள ஆய்வு

G SaravanaKumar

கொரோனா கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Jeba Arul Robinson