போதையில் சொந்த கடையை அடித்து உடைத்த உரிமையாளர்; சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ

பொள்ளாச்சி வடுக பாளையம் பகுதியில்  மது போதையில் சொந்த கடையை அடித்து  உடைத்த உரிமையாளரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏறப்பட்டது. பொள்ளாச்சி அருகே வடுகபாளையம் பகுதி அம்பேத்கர் வீதியைச் சேர்ந்தவர் குமார் (என்கின்ற) லிங்கதுரை திமுகவின் மாவட்ட வர்த்தக அணி துணை…

பொள்ளாச்சி வடுக பாளையம் பகுதியில்  மது போதையில் சொந்த கடையை அடித்து  உடைத்த உரிமையாளரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏறப்பட்டது.

பொள்ளாச்சி அருகே வடுகபாளையம் பகுதி அம்பேத்கர் வீதியைச் சேர்ந்தவர் குமார்
(என்கின்ற) லிங்கதுரை திமுகவின் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளராக உள்ளார். இவருடைய தம்பி மகாராஜா இவர்கள் இப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். இதே பகுதியில் உள்ள அ.தி.மு.கவினருக்கும் லிங்கதுரை, மகாராஜா ஆகியோருக்கும் தகராறு இருந்துவந்துள்ளதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் நேற்று திமுக நிர்வாகி லிங்கதுரை கையில் திமுக கொடியுடன் தனது
தம்பி மகாராஜா இருவரும் அவர்களது சொந்த மளிகைகடையில் பாட்டில்களை அடித்து
நொறுக்கியதுடன் கடையில் உள்ள பாட்டில்களை எடுத்து சாலையில் வீசினார்கள்.
பாட்டில்களை வீசிவிட்டு இருவரும் கெட்ட வார்த்தையால் திட்டிக் கொண்டிருந்தனர்.

இதனை அந்த வழியாக வாகனங்களில் வந்த பொதுமக்கள் பார்த்து அச்சமடைந்தனர்.
இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரிடம் விசாரித்து வருகின்றனர்.

குடிபோதையில் திமுக பிரமுகர் லிங்கதுரை திமுக கட்சி கொடியுடன் சொந்தக்கடைய உடைத்து அடாவடியில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

மேலும் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தும் லிங்கதுரை , மகாராஜா அமைதி அடையாமல் சத்தம் போட்டுக் கொண்டிருந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.