கருமுட்டை விவகாரம்; மருத்துவமனை சீல் அகற்றம்

சிறுமியிடம் கருமுட்டை விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஸ்கேன் சென்டருக்கு வைக்கப்பட்டிருந்த சீலை மருத்துவத் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அகற்றினர். ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரம் நாடு முழுவதும்…

சிறுமியிடம் கருமுட்டை விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஸ்கேன் சென்டருக்கு வைக்கப்பட்டிருந்த சீலை மருத்துவத் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அகற்றினர்.

ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது சிறுமியிடம் கருமுட்டை பெற்றது தொடர்பாக சிறுமியின் தாய் மற்றும் அவரது இரண்டாவது கணவர் மற்றும் இடைத்தெரியாக செயல்பட்ட மாலதி என்ற பெண் இளம் பெண்ணின் ஆதார் அடையாள அட்டையை போலியாக தயாரித்த ஜான் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளித்ததை தொடர்ந்து தமிழக அரசு முதல் கட்டமாக கருமுட்டை பெற்ற மருத்துவமனை ஸ்கேன் சென்டர்களுக்கு சீல் வைக்க உத்தரவிட்டது. மேலும் 15 நாட்களில் மருத்துவமனைக்கும் சீல் வைக்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகத்தின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டதை தொடர்ந்து நீதிமன்றம் மருத்துவமனை ஸ்கேன் சென்டர் விளக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றவும் புதிய நோயாளிகளை அனுமதிக்கவும் உத்தரவிட்டது. இதையடுத்து மருத்துவமனை இணை இயக்குனர் பிரம்ம குமாரி வருவாய் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியம் முன்னிலையில் ஈரோடு சுதா மருத்துவமனை ஸ்கேன் மையங்களுக்கு வைக்கப்பட்ட சிலை அகற்றினர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.