நாளை தொடங்குகிறது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்-இந்திய வீரர்களின் பட்டியல்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஒரு சர்வதேச, பல விளையாட்டுப் போட்டிகள் அடங்கிய திருவிழா ஆகும். ஒவ்வொரு நான்காண்டுகளுக்கு ஒரு முறை இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த விளையாட்டுப் போட்டியில் காமன்வெல்த் நாடுகளில் இருந்து வீரர்களும்…

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஒரு சர்வதேச, பல விளையாட்டுப் போட்டிகள் அடங்கிய திருவிழா ஆகும். ஒவ்வொரு நான்காண்டுகளுக்கு ஒரு முறை இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.

இந்த விளையாட்டுப் போட்டியில் காமன்வெல்த் நாடுகளில் இருந்து வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்பார்கள்.

இது நட்பு ரீதியிலான விளையாட்டு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த முறை இங்கிலாந்தின் பிர்மிங்ஹாமில் நாளை தொடங்குகிறது. அதாவது ஜூலை 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது. காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 503 பதக்கங்களை வென்றுள்ளது.

அவற்றில் தங்கம் 181, வெள்ளி 173, வெண்கலம் 149 பெற்றுள்ளது. கடந்த 3 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் மட்டும் மொத்தம் 231 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
பேட்மிண்டன், சைக்ளிங், பாக்சிங், ஜிம்னாஸ்டிக்ஸ், மல்யுத்தம் என பல விளையாட்டுப் போட்டிகள் உள்ளன. இந்த முறை கிரிக்கெட்டும் இடம்பெற்றுள்ளது.

காமன்வெல்த் விளையாட்டுகள் முன்பு 1930 முதல் 1950 வரை பிரிட்டிஷ் பேரரசு விளையாட்டுகள் என்றும், 1954 முதல் 1966 வரை பிரிட்டிஷ் பேரரசு மற்றும் காமன்வெல்த் விளையாட்டு என்றும், 1970 முதல் 1974 வரை பிரிட்டிஷ் காமன்வெல்த் விளையாட்டு என்றும் அறியப்பட்டது. ஆண்கள் மற்றும் பெண்கள் பதக்க நிகழ்வுகள் சம எண்ணிக்கையில் இடம்பெறும்.

காமன்வெல்த் விளையாட்டுகள் காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பால் கண்காணிக்கப்படுகின்றன. இது விளையாட்டுத் திட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் போட்டி நடத்தும் நகரங்களைத் தேர்ந்தெடுக்கிறது. 5,000 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் காமன்வெல்த் விளையாட்டுகளில் 15 க்கும் மேற்பட்ட வெவ்வேறு விளையாட்டுகளிலும் 250 க்கும் மேற்பட்ட நிகழ்வுகளிலும் போட்டியிடுகின்றனர்.

இந்திய வீரர்கள் 2022 பர்மிங்காம் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்கள் 15 விளையாட்டுகளில் பல நிகழ்வுகளில் பங்கேற்பார்கள்.

காமன்வெல்த் போட்டிக்கான 33 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா, சமீபத்தில் நடந்து முடிந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகுகிறார். பல சர்ச்சைகளுக்குப் பிறகு, தேஜஸ்வின் ஷங்கர் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பி.வி.சிந்து
  • டூட்டி சந்த் – பெண்களுக்கான 4×100 மீ தொடர் ஓட்டம்
  • ஹிமா தாஸ் – பெண்கள் 4×100 மீ தொடர் ஓட்டம்
  • அன்னு ராணி – பெண்களுக்கான ஈட்டி
  • எறிதல்மன்பிரீத் கவுர் – பெண்களுக்கான குண்டு எறிதல்
  • நாகநாதன் பாண்டி – ஆடவர் 4×400 மீ தொடர் ஓட்டம்
  • எம் ஸ்ரீசங்கர் – ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் உள்ளிட்ட 33 வீரர்-வீராங்கனைகள் தடகள பிரிவில் பங்கேற்கின்றனர்.
  • பிவி சிந்து – மகளிர் ஒற்றையர், கலப்பு அணி
  • அஸ்வினி போனப்பா – கலப்பு இரட்டையர், கலப்பு அணி
  • கிடாம்பி ஸ்ரீகாந்த் – ஆண்கள் ஒற்றையர், கலப்பு அணி
  • சிராக் ஷெட்டி – ஆண்கள் இரட்டையர், கலப்பு அணி உள்ளிட்டோர் பேட்மிண்டனில் இந்தியா சார்பில் போட்டியிடுகின்றனர்.

கிரிக்கெட்டில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மகளிர் அணி களமிறங்குகிறது. டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. மொத்தம் 10 நாடுகள் பங்கேற்கிறது.
ஹாக்கியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் களமிறங்குகின்றன.
ஸ்குவாஷ் போட்டியில் தீபிகா, ஜோஸ்னா சின்னப்பா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.