ஈரோடு ரயில் நிலையம் அருகே காளை சிலையை வயதான நபர் ஒருவர் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு அடக்கும் வீடியோ காட்சிகள் சமூகவலை தளத்தில் வைராலாக பரவி வருகிறது.
ஈரோடு நகரின் பல்வேறு பகுதியில் ஈரோட்டின் பெருமையை எடுத்து கூறும் விதமாக
நகரின் முக்கிய சந்திப்பில் சிலைகள் அமைக்கபட்டுள்ளன. அந்த வகையில் ஈரோடு
பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பில் தந்தை பெரியார் சிலை, பேரறிஞர் அண்ணா
சிலை, அம்பேத்கர் சிலை, எம்ஜிஆர் சிலை, ஜெயலலிதா சிலை, அரசு மருத்துவமனை
சந்திப்பில் காமராசர் சிலை, ரயில் நிலையம் சந்திப்பில் தமிழர்களின் வீரத்தை
பறைசாற்றும் விதமாக காளை மாட்டை ஒருவர் வேட்டியை மடித்து கட்டி கொண்டு
அடக்கும் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காளை லையை ஒருவர் தனது வேட்டியை மடித்து கட்டி
கொண்டு அடக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்போது அவ்வழியாக காரில் சென்றவர் அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைராலாக பரவி வருகிறது.







