முக்கியச் செய்திகள் தமிழகம்

ரயில் நிலையத்தில் தூக்கிட்டு கொண்ட முதியவர்

மதுரை ரயில் நிலைய நடைமேடையில் பயணி ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மதுரை ரயில் நிலையத்தின் ஆறாவது நடைமேடை பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க வடமாநிலத்தைச் சேர்ந்த முதியவர் இன்று அதிகாலை தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதனை பார்த்த பயணிகள் ரயில்வே காவல்துறையினருக்கு அளித்த தகவலையடுத்து உடலை மீட்ட ரயில்வே போலிசார் உயிரை மாய்த்துக் கொண்ட நபர் யார் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் ரயில்வே போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிரை மாய்த்துக் கொண்ட நபர் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து ராமேஸ்வரம் வந்ததற்கான பயண சீட்டு இருந்துள்ளது. அதனைவைத்து அவருடைய ஆதார் மூலம் இறந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.


மதுரையில் ரயில் நிலையில் எப்போதும் பயணிகள் நடமாட்டம் உள்ள மைய பகுதியில் முதியவர் தூக்கிலிட்டுஉயிரை மாய்த்துக் கொள்ளும்  வரை யாருக்கும் தெரியாத அளவிற்கு நடந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தால் காவல் துறையினர் முறையாக ரோந்து பணியில் ஈடுபடுத்துவது இல்லையா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மதுரை ரயில் நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக ரயிலில் தவறி இளைஞர் உயிரிழந்த நிலையில் இன்று முதியவர் ஒருவர்  அடுத்தடுத்து ரயில் நிலையத்தில் ஏற்படும் உயிரிழப்புகள் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நாள் ஒன்றுக்கு எத்தனை காவலர்கள் கொரோனாவால் பாதிப்பு? – காவல் ஆணையர் பதில்!

Gayathri Venkatesan

‘சமத்துவமும், சமூக நீதியும் மிளிரும் இந்தியாவை உருவாக்குவோம்’ – பாமக நிறுவனர் ராமதாஸ்

Arivazhagan Chinnasamy

காவல்துறையின் கொடூரங்களை மீண்டும் கண் முன் கொண்டுவரும் விடுதலை 1 – திரை விமர்சனம்

Web Editor