முக்கியச் செய்திகள் சினிமா

கவின் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் கவின், நடிகை அபர்ணா நடிக்கும் ‘டாடா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

ஒலிம்பியா மூவீஸ் S. அம்பேத் குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில், கவின்- அபர்ணா நடிக்கும் ‘டாடா’ படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான முதல் சிங்கிள் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அழகான ரொமாண்டிக் படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் பார்வையாளர்களை எண்டர்டெயின் செய்யும் நோக்கத்தில் பல விஷயங்களையும் உள்ளடக்கியுள்ளது.

மொத்த படப்பிடிப்பும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்துள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா, டிரைலர் மற்றும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் படம் வெளியாக இருக்கும் தேதி என அடுத்தடுத்த அறிவிப்புகளை படக்குழு விரைவில் வெளியிட இருக்கிறது.

இயக்குநர் கே.பாக்யராஜ், ஐஸ்வர்யா, ‘முதல் நீ முடிவும் நீ’ படப் புகழ் ஹரீஷ், ‘வாழ்’ படப் புகழ் ப்ரதீப் ஆண்டனி மற்றும் பலர் இதில் நடித்திருக்கின்றனர்.

இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக எழில் அரசு பணிபுரிந்துள்ளார். இசை  ஜென் மார்ட்டின், எடிட்டிங் கதிரேஸ் அழகேசன், கலை இயக்குநர் சண்முகராஜ் பணியாற்றியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதம் விளாசிய 4வது இந்திய வீரர்!

Web Editor

நீட் சட்டத்தின் நிலை என்ன? தமிழக அரசு விளக்க வேண்டும் – ராமதாஸ்

Web Editor

மமதாவுக்கு ரூ.5 லட்சம் அபராதம்

Halley Karthik