‘ராயன்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

‘ராயன்’ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை (ஜூலை 16) வெளியாக உள்ள நிலையில், அதனை அறிவிக்கும் வகையில் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் தனுஷின் 50-வது திரைப்படமாக உருவாகும் ‘ராயன்’ திரைப்படத்தை சன்…

ராயன்’ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை (ஜூலை 16) வெளியாக உள்ள நிலையில், அதனை அறிவிக்கும் வகையில் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் தனுஷின் 50-வது திரைப்படமாக உருவாகும் ‘ராயன்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.  இந்த திரைப்படத்தை தனுஷே எழுதி,  இயக்கி,  நடித்து வருகிறார்.  இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன்,  சந்தீப் கிஷன்,  காளிதாஸ் ஜெயராம்,  எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வடசென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த டிசம்பர் மாதம் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.  இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  இத்திரைப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த திரைப்படம் ஜூலை 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையே, இந்த படத்தின் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதனை தொடர்ந்து ராயன்’ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை (ஜூலை 16) வெளியாக உள்ள நிலையில், படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.