தோனி தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட ‘எல்ஜிஎம்’ படத்தின் புதிய போஸ்டர்!

தோனி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் ’எல்ஜிஎம்’ படத்தின் இரண்டாம் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.   தல தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி தோனி ஆகிய இருவரும் இணைந்து தொடங்கிய தோனி எண்டர்டெயின்மென்ட்…

தோனி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் ’எல்ஜிஎம்’ படத்தின் இரண்டாம் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

 

தல தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி தோனி ஆகிய இருவரும் இணைந்து தொடங்கிய தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் முதல் திரைப்படம் ‘எல்.ஜி.எம்’(லெட்ஸ் கெட் மேரீட்). அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் இந்த திரைப்படத்தில் நடிகை நதியா, நடிகர் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் நாயகி இவானா, நகைச்சுவை நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். சாக்‌ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு அம்சத்துடன் தயாராகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 28-ம் தேதி சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

https://twitter.com/DhoniLtd/status/1662474655347916800?s=20

‘எல்.ஜி.எம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் ‘எல்.ஜி.எம்’ படத்தின் இரண்டாம் லுக் போஸ்டரை படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. வேனுக்குள் ஹரிஷ் கல்யாண், இவனா, நதியா, யோகி பாபு உள்ளிட்டோர் குடும்பத்துடன் இருக்கும் இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.