3 நாட்கள் வீட்டில் கட்டாயமாக தேசியக் கொடி ஏற்ற வேண்டும்-புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மூன்று நாட்கள் வீட்டில் கட்டாயமாக தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு,…

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மூன்று நாட்கள் வீட்டில் கட்டாயமாக தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சுதந்திர போராட்ட வீர்ர்களின் தியாகங்களை போற்றும் வகையில் ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி ஏற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதனை செயல்படுத்த பள்ளி மாணவர்களால் மட்டுமே முடியும். நாட்டு பற்று, நாட்டின் மீது அக்கறையை காட்டும் வகையில் மூன்று நாட்கள் வீட்டில் கொடி ஏற்றப்பட வேண்டும்.

மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் கூறி ஆகஸ்ட் மாதம் 13, 14. 15 ஆகிய மூன்று நாட்கள் வீட்டில் கட்டாயமாக கொடி ஏற்ற வேண்டும்.

ஒவ்வொரு துறை மூலமாக 75வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பிரதமர் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தேசப்பற்றை ஊக்குவிக்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது.

சிறப்பான கல்வி பெறுவதில் புதுச்சேரி போன்று வேறு எங்கும் கிடையாது. இதனை மாணவர்கள் பயன்படுத்தி கொண்டு நன்றாக படிக்க வேண்டும் என்றார் முதலமைச்சர் ரங்கசாமி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.