உலக பல்கலைக்கழங்களுக்கு இடையேயான 10 மீ. ஏர் ரைபில் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிளில் பிரிவில் உலகத் தர வரிசையில் முதலிடத்தில் உள்ள இளவேனில் 252.5 புள்ளிகளைப் பெற்று தங்கம் வென்றார்.
இந்தப் பதக்கத்தின் மூலம், உலகக் கோப்பை தொடரில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் தங்கம் வென்ற மூன்றாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை இளவேனில் பெற்றுள்ளார். அஞ்சலி பகவத் மற்றும் அபூர்வி சந்தேலா இதற்கு முன் இந்த சாதனையை படைத்துள்ளனர். மூத்தோர் பிரிவில் இளவேனில் பெற்ற முதல் உலகக் கோப்பைப் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.







