அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக ஓ.பன்னீர்செல்வம் வர வேண்டும் எனச் சென்னை, தேனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவில் அவ்வப்போது தலைமை பிரச்சனை தலைதூக்குவது வாடி கையாகிவிட்டது. அதிலும், குறிப்பாக அதிமுக ஆட்சியை இழந்த பிறகு கட்சித் தலைமை குறித்த சர்ச்சைகள் போஸ்டர் வழியாக பூதாகரமாக வெடித்து வருகிறது. அதிமுகவின் தலைமைக்காக ஒருங்கிணைப்பாளருக்கு ஆதரவாகச் சிலரும், இணை ஒருங்கிணைப்பாளருக்கு ஆதரவாகச் சிலரும் மாறி மாறி போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். ஆனால், அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதே பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களின் வேண்டுகோளாக உள்ளது
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்குமுன்பு, ஒற்றைத்தலைமை காலத்தின் அவசியம் எனவும், யார் அந்த ஒற்றைத்தலைமை என்பதைக் கட்சி முடிவு செய்யும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.
அண்மைச் செய்தி: ‘இனி டோலில் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற கவலை வேண்டாம்’
இந்நிலையில், அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக ஓ.பன்னீர்செல்வம் வர வேண்டும் எனவும், பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்படவும் ஆதரவு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும், சென்னை, தேனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.