முக்கியச் செய்திகள் தமிழகம்

உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அமர்வுபடி பத்து மடங்கு உயர்வு-அரசாணை வெளியீடு

மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பிரதிநிதிகளுக்கு அமர்வுப் படித் தொகை பத்து மடங்கு உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வு படித்தொகை ஐந்து மடங்கு உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கான அமர்வு படித்தொகை ரூ.100 இல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சிகள் தினம் கொண்டாடப்படும் என்றும், மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பிரதிநிதிகளுக்கு அமர்வுப் படித் தொகை 10 மடங்காக உயர்த்தி வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தார்.

அதன்படி, மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பிரதிநிதிகளுக்கு அமர்வுப் படித் தொகை பத்து மடங்கு உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பிரதிநிதிகளுக்கு கூட்டங்களில் கலந்து
கொள்ளும் போது வழங்கப்படும் அமர்வுப்படித் தொகை பத்து மடங்காகவும், ஊராட்சி
தலைவர் கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அமர்வு படித்தொகை ஐந்து
மடங்கும் உயர்த்தப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்த அரசாணையின் மூலம் கிராம ஊராட்சி தலைவருக்கு வழங்கப்பட்டு வந்த அமர்வு
படித்தொகை ரூ.100 லிருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சித்
தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவருக்கு வழங்கப்பட்டு வந்த அமர்வு படித்தொகை ரூ.100
லிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 12 ஆயிரத்து 525
கிராம ஊராட்சி தலைவர்கள், 388 ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், 36 மாவட்ட ஊராட்சி
தலைவர்கள் உட்பட ஒரு லட்சத்து 19 ஆயிரம் உள்ளாட்சி பிரதிநிதிகள் பயனடைவார்கள்
என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பட்டியலின அதிகாரிக்கு இருக்கை ஒதுக்கப்படாத விவகாரம்; அண்ணாமலை கேள்வி!

Arivazhagan Chinnasamy

முதலில் விருது கொடுத்தது  நியூஸ்7 தமிழ் தான் – அனிதா பால்துரை நெகிழ்ச்சி

EZHILARASAN D

இந்து முன்னணி பிரமுகர் கைது!

Vandhana