டிசம்பர் மாதத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை மேற் கொண்டு வருவதாக நகர்ப்புற நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கொரோனா தடுப்பூசி மையத் தை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும், நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும், திமுக அரசு தரம் உயர்த்தி உள்ளதால் வார்டு வரை யறை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகக் கூறினார்.
இதன் காரணமாக உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் கேட்கப்பட்டிருப்பதாகக் கூறிய அவர், டிசம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
டிசம்பர் மாதத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது என்றும் நீதிமன்ற உத்தரவை பொறுத்து தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.