முக்கியச் செய்திகள் தமிழகம்

பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பு: பள்ளிக் கல்வித்துறை திடீர் உத்தரவு

பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பாலியல் சீண்டல்களில் இருந்து மாணவிகளை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது..

அதன்படி, பள்ளிகளில் பெண் எஸ்.பி.-க்கு இணையான காவல் அதிகாரி, சமூக பாதுகாப்பு அலுவலர், சட்ட அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், உளவியல் நிபுணர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் புகார் பெட்டி அமைத்தல், அருகாமையில் உள்ள மகளிர் காவல் நிலைய தொடர்பு எண்களை பள்ளி வளாகத்தில் வெளியிடுதல் போன்ற பணிகளை துரித கதியில் செயல்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட உத்தரவுகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுவதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தர விட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

ராகுல் காந்தியின் பயணத்திட்டத்தில் மாற்றம்..!

Jayapriya

எனக்கும் இந்தி தெரியாது: உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து. 

Ezhilarasan

மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்

Saravana Kumar