மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நடிகை கங்கனா இன்று மரியாதை செலுத்தினார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதை தலைவி என்ற பெயரில் சினிமா வாகி இருக்கிறது. இந்தப் படத்தில் ஜெயலலிதா வேடத்தில் இந்தி நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அரவிந்த்சாமி, எம்.ஜி.ஆராக நடித்துள்ளார். ஆர்.எம்.வீரப்பனாக சமுத்திரக்கனி, எம்.ஜி.ஆர் மனைவி ஜானகியாக மது பாலா, சசிகலாவாக பூர்ணா நடித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த படத்தில் ஜெயலலிதாவின் சினிமா வாழ்க்கை, எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு முதல மைச்சர் ஆவது வரையான காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளது. வரும் 10 ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக இன்று சென்னை வந்த நடிகை கங்கனா, சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
அவருடன் இயக்குநர் ஏ.எல்.விஜய், தயாரிப்பாளர்கள் விஷ்ணுவர்தன் இந்துரி, பிருந்தா ஆகியோரும் சென்றனர்.