இந்த தேர்தல்களத்தின் ஆட்டநாயகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் -வைரமுத்து புகழாரம்!

இந்தத் தேர்தல் களத்தின் ஆட்ட நாயகன் முதலமைச்சர்  முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் என்று கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் விறுவிறுப்புடன், அதேநேரம் அமைதியாக வாக்குப்பதிவு…

இந்தத் தேர்தல் களத்தின் ஆட்ட நாயகன் முதலமைச்சர்  முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் என்று கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் விறுவிறுப்புடன், அதேநேரம் அமைதியாக வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது.  சென்னையில் வரிசையில் நின்று முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்.

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்த சராசரி வாக்குப்பதிவு 69.46% என அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  இந்த மக்களவைத் தேர்தல் திமுக,  அதிமுக,  பாஜக,  நாம் தமிழர் கட்சி இடையே நான்குமுனை போட்டி நிலவியது. கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் மட்டும் 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது சமூகவலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

“மக்கள் வெள்ளம்

மணியான பேச்சு

துருப்பிடிக்காத உற்சாகம்

தகர்க்க முடியாத தர்க்கம்

சொல்லியடித்த புள்ளிவிவரம்

சோர்ந்துவிடாத உடல்மொழி

தற்புகழ் கழிந்த உரை

தமிழர்மீது அக்கறை

இந்தத் தேர்தல் களத்தின்

ஆட்ட நாயகன்

முதலமைச்சர்தான்

முத்துவேல் கருணாநிதி

ஸ்டாலின்தான்

ஒரு பூங்கொத்து” என தெரிவித்துள்ளார்.

 

https://twitter.com/Vairamuthu/status/1781510883002466733?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1781510883002466733%7Ctwgr%5E827a844c731db09b2c30280728727f8775b10b6d%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.maalaimalar.com%2Fnews%2Fstate%2Ftamil-news-vairamuthu-tweet-714180

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.