கலைஞர் கோட்ட திறப்பு விழாவில் பங்கேற்க இருந்த நிதிஷ்குமாரின் வருகை திடீர் ரத்து!

கலைஞர் கோட்ட திறப்பு விழாவில் பங்கேற்க தமிழ்நாடு வருவதாக இருந்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.  மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள்…

கலைஞர் கோட்ட திறப்பு விழாவில் பங்கேற்க தமிழ்நாடு வருவதாக இருந்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடி மதிப்பில் 7,000 சதுர அடி பரப்பளவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது .  இதன் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது.
தேர் போன்ற வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதியின் பொது வாழ்வை சித்தரிக்கும்  அருங்காட்சியகம், முத்துவேலர் நூலகம், திருமண மண்டபம் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன.
கலைஞர்  கோட்டம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் இருவரும்  பீகாரிலிருந்து இன்று விமானம் மூலம் திருச்சி வருவதாக இருந்தது. அங்கிருந்து திருவாரூருக்கு செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உடல் நிலை காரணமாக அவர் தனது பயணத்தை  ரத்து செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதேவேளையில் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் விழாவில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.