36.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் செய்திகள்

நடிச்சா பான் இந்தியாதான்: ட்விட்டர் ட்ரெண்டிங்கில் கலக்கும் லெஜண்ட் சரவணன்

கேஜிஎஃப்,  ஆர்ஆர்ஆர், புஷ்பா என தெலுங்கு, கன்னட மொழிகளில் அடுத்தடுத்து பான் இந்தியா படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் முன்னோடியான தமிழ்த் திரையுலகில் ஒரு பான் இந்தியா படம் கூட வெளிவராதா என ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், நான் இருக்கும்போது நீங்க ஏன்பா கவலைப்படுறீங்க என மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார் அண்ணாச்சி.

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் அந்நிறுவனத்தின் கலர்ஃபுல்லான விளம்பரங்களில் தோன்றி பட்டிதொட்டி எங்கும் மக்களின் கவனத்தை ஈர்த்தார். அதைத்தொடர்ந்து, இவர் வெள்ளித்திரையிலும் தற்போது கால் பதித்துள்ளார். தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் என்ற தன்னுடைய நிறுவனத்தின் பெயரையே ‘தி லெஜண்ட் சரவணன்’ என்று தன்னுடைய படத்துக்கும் பெயர் வைத்து நடித்து வருகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரோடக்ஷன்ஸ் முதல்முறையாக மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமான முறையில் 5 மொழிகளில் இப்படத்தைத் தயாரித்து வருகின்றனர். இப்படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்துக்கு துள்ளலான இசையை அமைத்துள்ளார். இப்படத்தில் ஊர்வசி, ரெளடேலா, ஈத்திகா, விவேக், நாசர், பிரபு, விஜயகுமார், யோகி பாபு உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஆடியோ லான்ச் சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக சமீபத்தில் நடைபெற்றது. பான் இந்தியா படம் எந்தால் இவ்விழா. இதில், முன்னணி நடிகைகளான  தமன்னா, பூஜா ஹெக்டே, ஹன்சிகா, ராய் லக்ஷ்மி, ஊர்வசி  ரெளடேலா, ஷ்ரத்தா, யாஷிகா, நுபுர்சனோன், டிம்பிள் ஹயாதி உள்ளிட்ட பான் இந்தியா பிரபலங்கள் கலந்துகொண்டனர். ஆடியோ லான்ச் விழாவுக்கு மட்டுமே பல கோடி ரூபாயை அண்ணாச்சி செலவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தின் முதல் லிரிக்கல் பாடல் மொசலோ மொசலுவை பிரபல இயக்குநர்கள் மணிரத்னம், ராஜமெளலி, சுகுமார் ஆகியோர் வெளியிட்டனர். இந்தப் பாடலை ஒரு கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் பாடல் வரிகளை பா.விஜய் எழுதியுள்ளார். அர்மான் மாலிக் பாடலைப் பாடியுள்ளார். ராஜூசுந்தரம் மாஸ்டர் இந்தப் படத்துக்கு நடனம் அமைத்துள்ளார். இந்தப் பாடலில் பிக் பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோருடன் தோன்றும் லெஜண்ட் சரவணன் தன்னுடைய நடன அசைவுகளால் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

இந்தப் படத்தின் இரண்டாம் பாடலான வாடிவாசலை கவிஞர் சினேகன் எழுதியுள்ளார். பென்னி தயாள், ஜொனிதா காந்தி பாடிய இப்படத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், ஒரு கோடி பார்வைகளைக் கடந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இசை வெளியீட்டு விழாவில் செய்தியாளர்களை சந்தித்த லெஜண்ட் சரவணன், தனக்கு ரஜினியும் விஜயும்தான் ரோல் மாடல் என்று கூறினார். இவ்வளவு பிரம்மாண்டம் படத்தில் எதற்கு என்று கேட்டபோது, ‘எல்லாம் வெற்றிக்காகத்தான்’ என்று பதில் கூறினார்.

லெஜண்ட் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்ட நிலையில், 24 மணி நேரத்துக்குள் 5 மில்லியன் வியூஸ்களைப் பெற்றுள்ளது. மேலும், ட்ரெண்டிங்கிலும் இப்படத்தின் ட்ரெய்லர் முதல் இடத்தில் இருந்தது. இப்படத்தில், சரவணன் விஞ்ஞானியாக நடித்துள்ளார். காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் என எல்லாம் கலந்த மசாலா படமாக இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லெஜண்ட் படத்தைத் தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களிலும் சரவணன் நடிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பான் இந்தியா பிரபலங்கள் பங்கேற்ற இசை வெளியீட்டு விழா, டிரெய்லரில் தெறிக்கவிடும் பிரம்மாண்டம், யூடியூப் டிரெண்டிங்கில் நம்பர் 1, கோடிக்கணக்கான வியூஸ் என ஆரம்பம் முதலே கலக்கிவரும் லெஜண்ட் சரவணனின் புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 10 பான் இந்தியா நடிகைகளுக்கு மத்தியில் சரவணன் கெத்தாக அமர்ந்திருக்கும் புகைப்படம், நடன இயக்குநர் சாண்டியுடன் நடனமாடும் புகைப்படம், குழந்தையுடன் செல்ஃபி எடுக்கும் புகைப்படம் என அனைத்தையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

மீம்ஸ் கலைஞர்களும் தங்கள் பங்கிற்கு லெஜண்ட் சரவணனை ஆதரிக்கும் வகையிலும், கலாய்க்கும் வகையிலும் பல்வேறு மீம்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர். “இந்தப் படமெல்லாம் ஹிட் ஆகுமாப்பா என ஒருவர் கேட்க, அட சும்மா இருப்பா படத்தை பார்க்க வரவங்களுக்கு எல்லாம் இலவசமா கட்டப்பை கொடுத்துப்புட்டு கேஜிஎஃப் சாதனையையே முறியடிச்சாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல”… என கூறுவது போன்ற மீம்ஸ் மற்றும் “தல, தளபதி, லெஜண்ட் சரவணா” போன்ற மீம்ஸ்களும் லைக்ஸ்களை அள்ளி வருகின்றன.

-ம.பவித்ரா

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading