ஜெயிலர் படத்தின் கேரளா ரிலீஸ் உரிமத்தை முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ’ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, விநாயகன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ’
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இதன் இசைவெளியீட்டு விழா வருகிற ஜூலை மாத இறுதியில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக கூறியுள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் படப்பிடிப்பு முடிவடைந்ததை கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படத்தையும் பதிவு இணையத்தில் பகிர்ந்தது.
Happy to announce that @GokulamMovies will bring @sunpictures prestigious film, @rajinikanth's #Jailer to Kerala theaters.
First time #thecompleteactor @Mohanlal sharing screens pace with #superstar @rajinikanth
In Cinemas From 10th Aug 2023@Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/lHeRzZ62Vd
— SreeGokulamMovies (@GokulamMovies) June 8, 2023
இந்நிலையில், ஜெயிலர் படத்தின் கேரளா ரிலீஸ் உரிமத்தை முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.