நடிகர் யோகி ஸ்னூக்கர் கேம் விளையாடுவது போன்ற வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சிறிய நகைச்சுவை கதாபாத்திரம் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் யோகி பாபு. அதன் பின்னர் தனது நடிப்புத் திறமை, தனித்துவ தோற்றம், ஒவ்வொரு டயலாக்கிற்கும் உடனடியாக கவுன்டர் கொடுக்கும் அவரது இயல்பு ஆகியவற்றின் காரணமாக வெள்ளித் திரையிலும் வெற்றிகரமாக முத்திரை பதித்துள்ளார்.
இவர் நடித்த சூது கவ்வும், டிமாண்டி காலனி என அடுத்தடுத்து பார்வையாளர்கள் கவனத்தை ஈர்த்தது. ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்திருந்த இவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரிதாக பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து மெர்சல், கோலமாவு கோகிலா போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தவிர்க்க முடியாத காமெடியனாக உருவெடுத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சினிமாவை தாண்டி விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்ட யோகி பாபு, அதிக நேரங்களில் கிரிக்கெட் , கால் பந்து உள்ளிட்ட விளையாட்டுக்களை அவ்வபோது விளையாடி வருகிறார். மேலும் அவர் அது தொடர்பான வீடியோக்களை தன் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருவது வழக்கம்.
— Yogi Babu (@iYogiBabu) May 20, 2023
இந்த நிலையில் நடிகர் யோகி பாபு ஸ்னூக்கர் விளையாட்டு விளையாடுவதை போன்ற வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் வேடிக்கை என்னவெனில் ஸ்னூக்கர் பந்துகளை சின்ன வயதில் கோலி விளையாடுவது போல விரல்களால் அடித்து விளையாடி உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பலரால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.