“கரூர் சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது” – செங்கோட்டையன் பேட்டி!

அரசியல் வரலாற்றில் இதுபோல சம்பவம் நடைபெற்றது இல்லை என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபிச்செட்டிப்பாளையம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “கரூர் சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. இதயமே வெடித்து விடும் போல் உள்ளது. அரசியல் வரலாற்றில் இதுபோல சம்பவம் நடைபெற்றது இல்லை. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறந்தவர்கள் அனைவரும் இறைவனடி சேர வேண்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் நலமுடன் வீடு திரும்ப ஆசைப்படுகிறேன். வரும் காலங்களில் தமிழக அரசு மற்றும் மக்கள் இது போன்ற துயரங்களை ஏற்படுத்தாமல் இருக்க அந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஒருங்கிணைப்பு பணி குறித்து நீங்கள் தான் கூற வேண்டும்.

ஆதரவாளர்கள் நீக்கப்படுகிறார்கள் என்ற கேள்விக்கு, “பொருத்து இருந்திருந்து பாருங்கள் என்றார். நான் அமைதியாக இருப்பது வெற்றிக்கான அறிகுறி. எடப்பாடி பழனிச்சாமி கோபிசெட்டிபாளையம் வழியாக வருவதாக எந்த தகவலும் எனக்கு கிடைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.