அழிவின் விளிம்பில் காரமடை கை முறுக்கு

50 ஆண்டுகளாகப் பாரம்பரிய முறைப்படி கைகளால் மட்டுமே தயாரிக்கப்படும் காரமடை கை முறுக்கு தொழிலானது இன்று அழிவின் விளிம்பில் உள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை, பண்டைய காலம் முதல் தற்போது வரை வரலாற்றுக்கு…

50 ஆண்டுகளாகப் பாரம்பரிய முறைப்படி கைகளால் மட்டுமே தயாரிக்கப்படும் காரமடை கை முறுக்கு தொழிலானது இன்று அழிவின் விளிம்பில் உள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை, பண்டைய காலம் முதல் தற்போது வரை வரலாற்றுக்கு பெயர் பெற்ற நகரமாகும். காரமடை அரங்கநாதர் தேர்த் திருவிழாவானது கொங்கு மண்டலத்திலேயே மிகவும் பிரசித்து பெற்றது. தேர்த்திருவிழாவிற்கு இணையாக காரமடை கை முறுக்கும் மிகவும் பிரபலமானது. தேர்த்திருவிழா என்றாலே, திருவிழா கடைகளில் நிச்சயமாக கை முறுக்கு வியாபாரம் இருக்கும். அந்த அளவிற்குத் திருவிழாவும், காரமடை கை முறுக்கும் நெருக்கமானது.5 தலைமுறைகளாக செய்யப்பட்டு வந்த கை முறுக்கு தொழிலானது, ஆட்கள் பற்றாக்குறை காரணமாக அழிவின் விளிம்பில் உள்ளதாகவும், கடந்த காலங்களில் ஏராளமானோர் செய்து வந்த இந்த தொழிலை தற்போது 3 குடும்பங்கள் மட்டுமே செய்து வருவதாகவும் வருத்தம் தெரிவிக்கின்றனர். இத்தகைய பாரம்பரியம் மிக்க காரமடை கை முறுக்கிற்கு புவிசார் குறியீடு அளிப்பதன் மூலம் நலிவுற்ற நிலையில் உள்ள இத்தொழில் மீட்டெடுக்கப்படுவதுடன், பாரம்பரியமும் பாதுகாக்கப்படும் என்பதே காரமடை பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.