ராஜஸ்தானில் உள்ள என்எல்சி மின் திட்டத்திற்கு நிலம் வழங்கிய 28 பேருக்குதான் நெய்வேலியில் வேலை வழங்கப்பட்டுள்ளதாக என்எல்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக என்எல்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1992 முதல் 2012 வரையிலான காலக்கட்டத்தில் வடமாநிலத்தை சேர்ந்த 28 பேருக்கு என்எல்சியில் வேலை வழங்கப்பட்டுள்ளதாக தவறான செய்தி பரப்பட்டு வருவதாக கூறியுள்ளது.
மேலும்,என்எல்சி இந்திய அளவிலான நிறுவனம் என்பதை கருத்தில் கொள்ளாமல் தவறான செய்தி பரப்பப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
ராஜஸ்தானில் உள்ள என்எல்சி பர்சிங்கார் சுரங்கங்கள் மற்றும் அனல் மின் திட்டங்களுக்காக நிலம் வழங்கிய அம்மாநிலத்தை சேர்ந்த 28 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.
என்எல்சி நிறுவனத்தின் நன்மதிப்பை கெடுக்கும் நோக்கத்தில் செய்திகள் பரப்படுவதால், 28 பேர்கள் பற்றிய முழுமையான விபரங்கள் மற்றும் ராஜஸ்தானில் உள்ள என்எல்சியில் பணியமர்த்தப்பட்டதற்கான பட்டியலை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது.







