முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

மாயமான சிஆர்பிஎப் வீரர் கண்டுபிடிப்பு ?

காணாமல் போன சிஆர்பிஎப் வீரரை கண்டுபிடித்து அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சேர்ந்த வனிதாவின் கணவர் பாலமுருகன் சிஆர்பிஎப் வீரராக பணியாற்றி வருகிறார். CRPF 19ஆம் பட்டாலியனில் இருந்த பாலமுருகன், இரண்டாம் பட்டாலியனுக்கு மாற்றப்பட்டார். அதன் காரணமாகக் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இரவு சத்தீஸ்கர் சென்று அடைந்ததாக போனில் தெரிவித்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அக்டோபர் 11 காலை முதல் கேம்பில் பாலமுருகனைக் காணவில்லை என கேம்பில் இருப்பவரகள் அவரது மனைவி வனிதாவிடம் தெரிவித்தனர். கணவர் காணாமல் போன செய்தியை அறிந்த வனிதா மதுரை உயர்நீதி மன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். CRPF 2ஆம் பட்டாலியனைச் சுற்றி முழுக்க சிசிடிவி கேமராக்கள் உள்ள நிலையில், எனது கணவர் சென்றது எந்த கேமராவிலும் பதிவு பதிவாகவில்லை எனக் குறிப்பிடுகிறார்கள்.

எனது கணவர் காணாமல் போன நிலையில் 2 குழந்தைகளுடன் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன். எனது கணவரைக் கண்டுபிடித்துத் தரக்கோரி ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் மாவோயிஸ்ட்டுகள் நடமாடும் பகுதி என்பதால், எனது கணவர் அவர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் உள்ளது. ஆகவே எனது கணவரை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்” என அந்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில், காணாமல் போன சி.ஆர்.பி.எஃப் வீரரின் மொபைல் ஐ.எம்.இ.ஐ நம்பர் மூலம் அவர் இருக்கும் இடம் சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து நீதிபதிகள், சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் காவல்துறை உதவியுடன் மத்திய அரசு விரைந்து சிஆர்பிஎஃப் வீரரை கண்டுபிடித்து அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஜாமீன் கிடைக்காத விசாரணை கைதி விடுவிப்பு; நடந்தது என்ன?

Gayathri Venkatesan

டிரான்ஸ்பார்மரில் தீப்பிடித்து உயிரிழந்த ஒப்பந்த ஊழியர்!

பாக்கெட் மணிக்காக சண்டை? அப்பாவின் துப்பாக்கியால் சுட்டு மாணவர் தற்கொலை

Ezhilarasan