ஒலிம்பிக் போட்டி முக்கியச் செய்திகள்

நெதர்லாந்திடம் இந்திய மகளிர் ஹாக்கி அணி படுதோல்வி

ஒலிம்பிக் போட்டியில் தொடர்ந்து இரண்டு முறை அணித் தலைவர் ராணி ராம்பால் தலைமையில் தேர்வான இந்திய அணி முதல் போட்டியிலேயே நெதர்லாந்திடம் தோல்வியைத் தழுவியுள்ளது.
இதில் முதல் சுற்றில் இரு அணிகளும் தலா ஒரு கோல் எடுத்து சமன் செய்திருந்தது. முதல் மற்றும் இரண்டாம் சுற்றில் நெதர்லாந்து அணிக்கான பெனால்டி கோலை இந்திய அணியின் கோல் கீப்பர் சவீதா சாதூர்யமாக தடுத்தார். இதனால் நெதர்லாந்துக்கு நெருக்கடி அதிகமாகியது. முதல் கோலை நெதர்லாந்தின்  முன்கள ஆட்டக்காரர் ஆல்பர்ஸ் ஆட்டத்தின் முதல் கோலை பதிவு செய்தார். இதனையடுத்து இந்திய அணியின் சார்பில் முதல் கோலை அணியின் கேப்டன் ராணி பதிவு செய்தார்.
இரண்டு சுற்றுகள் இப்படியாக முடிய மூன்றாவது சுற்றில் நெதர்லாந்தின் வேன் கெஃபென் மார்கோட் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அணியின் இரண்டாவது கோலை பதிவு செய்தார்.  அதைத் தொடர்ந்து, நெதர்லாந்தின் ஆல்பர்ஸ் மூன்றாவது கோலை பதிவு செய்தார். இதனையடுத்து எதிர்பாராத விதமாக நெதர்லாந்தின் மாட்லா ஃபிரடெரிக் நான்காவது கோலை அடித்தார். இதனைத் தொடர்ந்து நான்காவது சுற்று ஆட்டத்தில் வேன் மாசக்கர் கியா ஜாக்குலின்  நெதர்லாந்தின் ஐந்தாவது கோலை அடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் நெதர்லாந்து அணி இந்தியாவை 5-1 என்கிற கோல் கணக்கில் வென்று அடுத்த போட்டிக்கு தகுதி பெற்றது நெதர்லாந்து.
ஏறத்தாழ 36 வருடங்களுக்குப் பின்னர் இந்திய மகளிர் ஹாக்கி அணி கடந்த ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மின்தடை என்று அச்சம் கொள்ள தேவையில்லை: அமைச்சர் செந்தில்பாலாஜி

EZHILARASAN D

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசுக்கு என்ன சிரமம்? – உயர்நீதிமன்றம்

G SaravanaKumar

கேரளத்தில் கன மழை – இருவர் பலி; பாலருவி, கும்பாவுருட்டி அருவி மூடல்

Web Editor