நாடு முழுவதும் சிகரெட் விலை உயர்வு இன்று முதல் அமல்!

சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் மீது மத்திய அரசு விதித்துள்ள கூடுதல் கலால் வரி, இன்று முதல் அமலுக்கு வருகிறது.

நாடு முழுவதும் சிகரெட் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி, மற்றும் பான் மசாலா மீதான சுகாதார செஸ், அதிகபட்சமாக 40% ஜிஎஸ்டி விகிதத்திற்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், இன்று முதல் சிகரெட் விலை கணிசமாக உயருகிறது. சிகரெட்டின் நீளத்தைப் பொறுத்து ரூ.2.05 – 8.50 வரை விலை உயர்கிறது. கூடுதல் கலால் வரிகளால், அடுத்த நிதியாண்டில் உள்நாட்டு சிகரெட் தொழில் 6-8% அளவு குறையக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

அதன்படி 75 மில்லி மீட்டர் உயர சிகரெட்டுகள் 5 ரூபாய் 40 காசுகள் விலை உயருகிறது. மெல்லும் புகையிலை மற்றும் ஜர்தா வாசனை கொண்ட புகையிலை மற்றும் குட்காவிற்கு முறையே 82% மற்றும் 91% கலால் வரி விதிக்கப்படுகிறது. வழக்கத்துக்கு மாறான அல்லது தரமற்ற வடிவமைப்பு கொண்ட சிகரெட்டுகள் மீது அதிகபட்சமாக தலா ரூ. 8.50 கூடுதல் வரி விதிக்கப்படும். மிகவும் பிரபலமான சிகரெட் வகைகள் இந்த வரி வரம்பின் கீழ் வராது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.