“தவெக ஆட்சியை கலைக்க வாய்ப்பில்லை!” – திருமாவளவன்

தவெக ஆட்சியை கலைக்க வாய்ப்பில்லை என நான் கருதுகிறேன் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மதுரை தல்லாகுளம் பகுதியில் விசிக சார்பில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விசிக தலைவர் திருமாவளவன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கூட்டணி சார்பில் நவ1ல் 10 லட்சம் பேர் கலந்துகொண்ட பேரணி நடைபெற்றது. இதில் விசிக கலந்துகொண்டது. இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் பெரும் ஆபத்தில் சிக்கியிருக்கிறது. EVM இயந்திரத்தை பயன்படுத்தி சங்க் பரிவார் சதித்திட்டத்திற்கு இணங்கி வாக்குதிருட்டு எனும் மோசடியை நிறைவேற்றியுள்ளார்கள். தலைமை தேர்தல் ஆணையரோடு இருந்த இரண்டு தேர்தல் ஆணையர்கள் சாட்சியமாக இருந்து அம்பலபடுத்தினர். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இந்தியா கூட்டணியில் தவெக இணைந்திருப்பது புதிய பரிமணாத்தை உருவாக்கியிருக்கிறது. டெல்லி பேரணியில் தவெக கொடியும் பறந்தது.

ஆட்டோ ஓட்டுனர்கள் பாதிப்பு

தமிழ்நாட்டில் கடந்த திமுக அரசு நடைமுறைப்படுத்திய விடியல் பயணம் இப்போது தவெக அரசு வெற்றி பயணமாக பரிணாமம் பெற்று விரிவாக்கம் அடைந்துள்ளது. ஒரு வகையில் பாராட்டினாலும் ஆட்டோ ஓட்டுனர், தனியார் வாகனங்களை பயன்படுத்தும் பலரும் வெகுவாக பாதிக்கப்படுவதாக செய்தி கோரிக்கை மனு அளிக்கின்றனர். தவெக அரசு இதனை கவனித்தில் கொள்ள வேண்டும் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், மினிபேருந்து உரிமையாளர்கள் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும்.

மின்சார பிரச்னை

மின்சார கொள்முதலில் முறைகேடு நடந்திருப்பதாக விவாதங்கள் உள்ளது. மின்வெட்டு்மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதில் முதலமைச்சர் விரைந்து தலையிட வேண்டும் , இது பொதுமக்கள் பிரச்னை என நினைத்து கலைய வேண்டும்.

உரிய ஆலோசனை வழங்குவோம்

தேனி சிறையில் சிறைவாசிகள் தப்பியோடிய விவகாரத்தில், தப்பியவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவெக ஆட்சிக்கு புதிது என்றாலும் ஆட்சியை திறம்பட நடத்துகிறார்கள் என்ற நன்மதிப்பும் பொதுமக்களிடம் இருக்கிறது. இதுபோன்று குறைபாடுகளை தவெகவிற்கு உரிய நேரத்தில் உரிய ஆலோசனைகளை வழங்குவோம்.

ஆட்சியை கலைக்க வாய்ப்பில்லை

தவெக ஆட்சியை கவிழ்க்க முயற்சி என அமைச்சர் நிர்மல்குமார் கூறியது தொடர்பான கேள்விக்கு, அதற்கு முயற்சி நடக்கிறதா என தெரியாது அதற்கு வாய்ப்பில்லை என கருதுகிறேன், கூட்டணி கட்சியினர் ஆதரவை திரும்ப பெற போவதில்லை என முடிவுசெய்துள்ளோம், அதனால் ஆட்சி கலைய வாய்ப்பில்லை. தவெக ஆட்சியை கலைக்க வாய்ப்பில்லை என நான் கருதுகிறேன்” இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.