நாகர்கோவிலில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர், தனது 2 குழந்தைகளையும் கட்டிப்போட்டுவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி நாகர்கோவில் அடுத்த கோட்டாறை சேர்ந்தவர்கள் ஜோஸ் கான்பியா – வனஜா தம்பதி. இவர்களுக்கு 13 மற்றும் 11 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த ஜோஸ் கான்பியா, சில மாதங்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பியுள்ளார். இந்நிலையில், வனஜா மீது ஜோஸ் கான்பியா சந்தேகம் அடைந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன் தினம் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ஜோஸ் கான்பியா, வனஜாவை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். மேலும், தங்களது இரு குழந்தைகளையும் கயிற்றால் கட்டுப்போட்டுள்ளார். அப்போது, ஒரு குழந்தை சப்தமிட்டதால் அதையும் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
அண்மைச் செய்தி: வாராயோ தோழி வாராயோ…
இந்நிலையில், நேற்று ஜோஸ் வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இதனைத்தொடர்ந்து குழந்தைகள் கயிற்றை அறுத்துக்கொண்டு வெளியில் வந்து அண்டை வீட்டாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







