முக்கியச் செய்திகள் தமிழகம்

கருமுட்டை சர்ச்சையில் சிக்கிய மருத்துவமனையின் சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவு ரத்து

கருமுட்டை விற்பனை விவகாரம் தொடர்பாக ஈரோடு மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து
உத்தரவிட்டுள்ளது.

ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுத்து விற்பனை செய்த
விவகாரத்தில், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையின் பதிவை சஸ்பெண்ட்
செய்தும், ஸ்கேன் மையங்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதை எதிர்த்து தனியார் மருத்துவமனை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை
விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்க
அவகாசம் வழங்கி, விதிமீறல் இருப்பதாக திருப்தி அடைந்தால் மட்டுமே
மருத்துவமனையின் பதிவை சஸ்பெண்ட் செய்ய முடியும் எனவும், பதிவை சஸ்பெண்ட்
செய்வதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறி, தமிழக அரசின்
உத்தரவுகளை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும் மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்க அவகாசம் வழங்கி 12 வாரங்களுக்குள்
இறுதி உத்தரவை பிறப்பிக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், மருத்துவமனைக்கு
வைக்கப்பட்ட சீலை அகற்றவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக மருத்துவ மற்றும் ஊரக சுகாதார பணிகள் இயக்குனர் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மேல் முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், பொது நலன் கருதி விதிமீறலில் ஈடுபடும் மருத்துவமனையை சீல் வைக்க சட்டத்தில் இடமுள்ளது எனவும், முன்கூட்டி நோட்டீஸ் அனுப்ப அவசியமில்லை எனவும் சிறுமியிடம் ஒன்பது முறை கருமுட்டை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக குற்ற வழக்கும் பதிவு செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.

கடந்த 35 ஆண்டுகளாக எந்த புகாருக்கும் இடமில்லாத வகையில் மருத்துவமனை
செயல்பட்டு வ்ந்த நிலையில், பத்திரிகை செய்தி அடிப்படையில் இந்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாகவும், சட்டப்படி தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்க
வேண்டியதில்லை என்ற போதும், பதிவை சஸ்பெண்ட் செய்வதற்கான காரணங்களை குறிப்பிட வேண்டும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரசின் உத்தரவில், விதிகளுக்கு
முரணாக செயல்படுவதால் பொதுநலன் கருதி மருத்துவமனையின் பதிவு சஸ்பெண்ட்
செய்யப்படுவதாக கூறி அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், காரணங்கள்
தெரிவிக்கப்படவில்லை எனக் கூற முடியாது என தெரிவித்துள்ளனர்.

கருமுட்டை விற்பனை விவகாரத்தில் அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை தனி
நீதிபதி புறக்கணித்திருக்க கூடாது எனக் கூறிய நீதிபதிகள், மருத்துவமனைக்கு
வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னையில் வி.பி.சிங்குக்கு சிலையுடன் மணிமண்டபம்-அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Web Editor

கொரோனாவை முழுமையாக தடுக்க, மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: ஜெ. ராதாகிருஷ்ணன்

Gayathri Venkatesan

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறை எப்படி செயல்படுகிறது?