அருணாச்சல பிரதேச மக்களின் வீரக்கதைகள்; பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை

அருணாச்சலப் பிரதேச மக்களின் வீரக்கதைகள் ஒவ்வொரு இந்தியருக்கும் விலைமதிப்பில்லா பாரம்பரியமாகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அருணாச்சலப் பிரதேச பொன்விழா மற்றும் மாநிலம் அமைக்கப்பெற்ற 36ஆம் ஆண்டு தினத்தில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினர்.…

அருணாச்சலப் பிரதேச மக்களின் வீரக்கதைகள் ஒவ்வொரு இந்தியருக்கும் விலைமதிப்பில்லா பாரம்பரியமாகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அருணாச்சலப் பிரதேச பொன்விழா மற்றும் மாநிலம் அமைக்கப்பெற்ற 36ஆம் ஆண்டு தினத்தில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினர். அந்த உரையில் பேசிய பிரதமர் கூறியதாவது,

நாட்டுக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த அருணாச்சலப் பிரதேச தியாகிகளை நினைவுபடுத்திய பிரதமர் மோடி, ஆங்கிலேய அபோர் போராக இருந்தாலும், சுதந்திரத்திற்குப் பின்னரான எல்லைப் பாதுகாப்பாக இருந்தாலும், அருணாச்சலப் பிரதேச மக்களின் வீரக்கதைகள் போற்றத் தக்கது என்று கூறினார்.

மேலும், முதல்வர் பெமா காண்டுவின் ஆட்சியிலான அருணாச்சல பிரதேசத்தின் வளர்ச்சியை மெச்சுகிறேன் எனவும், ஆசியாவின் மிகப்பெரிய நுழைவு வாயிலாக அருணாச்சல பிரதேசத்தை மாற்ற முடிவு செய்திருப்பதாகவும் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.