உக்ரைன் எல்லைப் பகுதியில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் அந்த நாட்டின் கிழக்குப் பகுதியில் கிளர்ச்சியாளர் குழுக்கள் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
உக்ரைன் நாட்டின் எல்லைப் பகுதியில் கடந்த சில நாட்களாக ரஷ்யா தனது இராணுவத்தைக் குவித்து வருகிறது. எல்லையில் போர் தொடங்கப் போவதாக பல்வேறு நாடுகளிலிருந்தும் தகவல் வெளிவரத் தொடங்கின. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கத் தயாராக இருக்கிறது என்று அமெரிக்கா வெளிப்படையாகவே,ரஷ்யாவை எச்சரிக்கை செய்யத் தொடங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால் ரஷ்யா உக்ரைன் மீதான போர் செய்தியை மறுத்திருந்தது. “உக்ரைன் மீது போர் தொடுக்கும் எண்ணம் இல்லையென்றும், பயிற்சிக்காகவே எல்லையில் ராணுவத்தை அனுப்பியதாகவும்” அந்த நாட்டின் தரப்பிலிருந்து செய்தி வெளியானது. இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் இருக்கும் ரஷ்யாவின் ஆதரவு கிளர்ச்சி குழுக்கள் அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் தாக்குதல் நடத்தியிருக்கிறது.
தாக்குதல் பற்றி அந்நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறுகையில் “நாங்கள் தூண்டுதல் நடவடிக்கைக்கு எதிரான பதில் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் ” என்று கூறினார். சமீபத்தில் மீயூனிக்கின் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அந்த நாட்டு அவர் ”உக்ரேனிய மக்கள் பயப்படவில்லை, ஆனால் வாழவேண்டும் என்று நினைக்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.
உக்ரைன் எல்லைப் பகுதிகளில் போர் தொடுப்பதற்கான சூழல் நிலவியதாக செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியிருக்கும் நிலையில் கிளர்ச்சி குழுக்கள் நடத்திய தாக்குதல் போருக்கான பதற்றத்தை உச்சத்தில் கொண்டு சென்றுள்ளது.