அரியலூர் அருகே தா.பழூர் ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயில் தீ மிதி திருவிழாவை முன்னிட்டு சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் பூ குழியில் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் அருள்மிகு ஸ்ரீதிரௌபதி
அம்மன் கோயிலில் பங்குனி மாத தீ மதி திருவிழா நடை பெற்றது. இந்த நிகழ்ச்சி 23 ஆம் தேதி காப்பு கட்டி துவங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு தினமும் இரவு பாரதம் நிகழ்ச்சி நடை பெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தீ மிதி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் தங்கள் நேரத்தி கடன்களை செலுத்தினர். இதற்காக சுமார் 50 க்கும் மேல் காப்பு கட்டி விரதம் இருந்து பூ குழியில் இறங்கினர்.
இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை தோளில் சுமந்தும் பூ குழியில்
இறங்கினர். இந்நிகழ்ச்சியை காண தா.பழூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.
—ம. ஸ்ரீ மரகதம்