ஹைதாராபாத்தில் ஒரு உயிரை காப்பாற்ற சிறப்பு மெட்ரோ ரயில் ஒன்று துடிக்கும் இதயத்துடன் நள்ளிரவில் தனது பயணத்தை மேற்கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூப்லி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. இதையடுத்து திங்கள்கிழமை அதிகாலையில் கிரீன் சேனலைச் செயல்படுத்தி அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்ட உயிருள்ள இதயத்தை நாகோலில் இருந்து ஜூப்ளி ஹில்ஸ் செக் போஸ்ட் மெட்ரோ நிலையத்திற்கு கொண்டு செல்ல ஒரு சிறப்பு ரயிலை ஹைதராபாத் மெட்ரோ ரயில் நிர்வாகம் வசதி செய்தது.
இதையடுத்து ஜூப்ளி ஹில்ஸ் பகுதியிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் கோகலே தலைமையிலான மருத்துவர்கள் குழு, நாகோல் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள காமினேனி மருத்துவமனையிலிருந்து அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்ட உயிருள்ள இதயத்துடன் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் கொண்டு செல்லப்பட்டது. இதயம் உடனடியாக மெட்ரோ ரயிலுக்குள் கொண்டு வரப்பட்டு மருத்துவர்கள் குழு இதயத்துடன் விரைந்தனர்.
மெட்ரோ ரயிலில் பயணித்த இதயம் சுமார் 25 நிமிடங்களுக்குப் பிறகு, சிறப்பு ரயில் ஜூப்ளி ஹில்ஸ் சோதனைச் சாவடியை அடைந்தது, அங்கு அப்பல்லோ ஜூப்லி ஹில்ஸின் ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினர் இதயத்தை பெற காத்திருந்தனர். இந்த முழு நடவடிக்கையும் மெட்ரோ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளால் லைன் 3 இல் தடையின்றி கையாளப்பட்டது. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து பேசிய ஹைதராபாத் மெட்ரோ ரயில் தலைமை நிர்வாக அதிகாரியான கேவிபி ரெட்டி, ஹைதராபாத் மெட்ரோ ரயில் தனது பயணிகளுக்கு கூடுதலாக எந்த சேவையை வழங்க உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், இந்த முறை மீண்டும், ஒரு விலைமதிப்பற்ற உயிரைக் காப்பாற்ற, இதயத்தை எடுத்துச் செல்ல விரைவான நேரத்தில் கிரீன் சேனலைச் செயல்படுத்தியுள்ளோம் என்றும் அவர் கூறினார். இதயத்தை விரைவாக கொண்டு செல்ல உதவிய மருத்துவர் குழுவினருக்கு அவர் தனது மனமார்ந்த நன்றிகள் என்று தெரிவித்தார்.







