ஆண்டவன் கட்டளையின் ஆறு மனமே ஆறு…

தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரங்களை தனது நடையால் மட்டுமே பிரித்துக் காட்டிய சிவாஜியின் கதை குறித்த சிறு தொகுப்பு இது.. பரம்பொருளான சிவபெருமானை நாம் பார்த்ததில்லை… வரலாற்று நாயகனான கர்ணனை தெரியாது, சிலிர்த்தெழுந்த வீரபாண்டிய…

தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரங்களை தனது நடையால் மட்டுமே பிரித்துக் காட்டிய சிவாஜியின் கதை குறித்த சிறு தொகுப்பு இது..

பரம்பொருளான சிவபெருமானை நாம் பார்த்ததில்லை… வரலாற்று நாயகனான கர்ணனை தெரியாது, சிலிர்த்தெழுந்த வீரபாண்டிய கட்டபொம்மனை யாரும் நேரில் கண்டதில்லை … அவர்கள் அனைவரும் எப்படி இருந்திருப்பார்கள் என்றுகூட நமக்கு தெரியாது…ஆனால் அவர்களையெல்லாம் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்திய நடிகர் திலகம் சிவாஜி கணேசனைத் தெரியும்…


கந்தன் கருணை திரைப்படத்தில் வீரபாகுவாக வித்தியாச நடையை காட்டியிருப்பார், பார்த்தாலே பசி தீரும் திரைப்படத்தில், பாலு என்ற கதாபாத்திரத்தின் தன்னம்பிக்கை நடையை தந்திருப்பார்.போனால் போகட்டும் போடா பாடலில், ரவியாக அலட்சிய நடையும், பாகப்பிரிவினையில் தட்டுத் தடுமாறும் கண்ணையனாக தளர்நடை போட்டிருப்பார்.


ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் இடம்பெற்ற ஆறு மனமே ஆறு பாடல் காட்சியில், கிருஷ்ணனாக நம்பிக்கையூட்டும் நடை நடந்த சிவாஜிக்கு திருவிளையாடல் திரைப்படத்தில் சிவபெருமானின் ராஜகம்பீர நடையை எவ்வாறு நடப்பது என தயக்கம் ஏற்பட்டது. மனிதராக இருந்தால் எப்படியும் நடந்து காட்டி விடலாம்… ஆனால் கடவுளின் நடையை காட்டுவது எப்படி?.. கடவுளான சிவனின் நடையை வெளிப்படுத்த தனிக்கவனம் எடுத்துக் கொண்டார் சிவாஜி.


பரமசிவன் எப்படியிருப்பார், அவரது நடை, உடை, பாவனைகள் எப்படியிருக்கும் என அதுவரை கற்பனை கண்டவர்களுக்கு, சிவாஜியின் திருவிளையாடல் நடை என்றும் நெஞ்சில் நிலைத்திருக்கும்…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.