ராமநாதபுரம் அருகே பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் முடி முறையாக வெட்டாமல் பள்ளிக்கு வந்ததால் தலைமை ஆசிரியர் தாக்கியுள்ளார். தலையில் காயம் ஏற்பட்ட மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
ராமநாதபுரம் மாவட்டம் அருகே ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஒருவனை முறையாக தலை முடி வெட்டாமல் வந்ததாக கூறி என தலைமை ஆசிரியர் கண்டித்ததாக தெரிகிறது.
மேலும் கையில் மாணவனின் தலை முடியை பிடித்து சுவற்றில் மோதியதாக கூறப்படுகிறது. இதில் மாணவனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. தலையிலிருந்து ரத்தக் கசிவு ஏற்பட்டதால் உடனடியாக அவர் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.







