முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திமுக ஆட்சியின் அவலங்களை  மறைப்பதற்கு ஆளுநர் விவகாரம் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது – டிடிவி தினகரன்

திமுக திராவிட மாடல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவதற்கும், திமுக ஆட்சியின் அவலங்களை  மறைப்பதற்கும் ஆளுநர் விவகாரம் ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக அலுவலகத்தில் தூத்துக்குடி, தென்காசி கழக வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது, அதனைத் தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது..

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழக சட்டசபையில் நேற்று நடந்தது கருப்பு நாளாக பார்க்கப்படுகிறது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக எந்த குடிமகன் செயல்பட்டாலும் அது தவறுதான் ஆளுநரின் இந்த நடவடிக்கை உண்மையில் வருத்தம் அளிக்கும் செயலாக தான் அனைவராலும்  பார்க்கப்படுகிறது

தமிழ்நாடு என்ற பெயர் சரியில்லை தமிழகம் தான் சரி என்று ஆளுநர்  கூறுவது, மத்திய அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுவது போல் உள்ளது. மத்திய அரசு  ஆளுநரை திரும்ப பெற்றால் மட்டுமே மத்திய அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.

உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ தமிழகத்தில் இருக்கும் அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், அவர்களின் செயல்பாட்டுக்கு உதவியாகவும் தமிழ்நாடு மக்களின் நலனுக்காக செயல்படுவது தான் நன்றாக இருக்கும். ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அரசாங்கம் தவறாக செயல்பட்டால்
அதற்காக ஆளுநர் நடவடிக்கை எடுத்தால் பரவாயில்லை.

உதயநிதி ஸ்டாலின் எங்களைப் பார்த்து ஆளுநர் பயப்படுகிறார் என்று கூறி
வருகிறார்.  அவர்கள் மட்டும் இல்லை செவிலியர்கள், அனைத்து தரப்பு ஊழியர்கள்,
மக்களும்தான் உங்களை பார்த்து பயப்படுகிறார்கள்.

ஒரு பக்கம் ஆளுநர் இந்த ஆட்சிக்கு எதிராக இருக்கிறார், மற்றொரு பக்கம் ஆதரவாக
இருக்கிறார். ஏனென்றால் 20 மாதங்களில் திமுக ஆட்சிக்கு கெட்ட பெயர் மட்டுமே உள்ளது. அரசு ஊழியர்கள் செவிலியர்கள் போன்றவர்கள் இந்த அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே திமுக அரசின்  இந்த குற்றச்சாட்டுகளை
மறைப்பதற்கு ஆளுநரின் செயல்பாடு சாதகமாக  உள்ளது.

அரசியல் தலைவராக முதலமைச்சர் செய்தது தவறு இல்லை. ஆனால் திமுக திராவிட மாடல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவதற்கும் மறைப்பதற்கும் ஆளுநர் விவகாரம் ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும்” என  டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மனைவியின் தங்கையுடன் தூக்கிட்டுஉயிரை மாய்த்துக் கொண்ட வடமாநில இளைஞர்

Gayathri Venkatesan

ரேசன் பொருட்கள் வாங்காதவர்கள் கௌரவ அட்டையை வாங்கி கொள்ளலாம் – ராதாகிருஷ்ணன் விளக்கம்

EZHILARASAN D

நிக்கி கல்ராணி வீட்டில் திருடிய தனுஷ்?

G SaravanaKumar