சட்டமன்றத் தேர்தலுக்கான அறிக்கையை சட்டப் பஞ்சாயத்து இயக்கத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளதாக மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் காணொலி வாயிலாக கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் பேசிய அவர், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான அறிக்கையை சட்டப் பஞ்சாயத்து இயக்கத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளதாக கூறினார். அதிகார வரம்பின் கீழ் கிராமப்புற ஊராட்சிகள் கொண்டுவரப்படும் என கூறினார்.
மேலும், தமிழகத்தை சீரமைப்பது தான் மக்கள் நீதி மய்யத்தின் இலக்கு என குறிப்பிட்டார். நல்லவர்கள் தங்களுடன் இணையலாம் என கூறிய அவர், காங்கிரஸ் கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் சொல்லும் தருணம் இதுவல்ல என்று தெரிவித்தார். சீரமைப்போம் தமிழகத்தை என்றால் அனைத்தையும் சீரமைப்பது தான் என்று கூறியுள்ளார்.







