”உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பிரச்சார பயணத் திட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 29ஆம் தேதி முதல் புதிய கோணத்தில் பிரச்சார வியூகத்தை திட்டமிட்டுள்ளதாக கூறினார். மேலும் பிரச்சாரத்தின்போது திமுக சார்பில் வழங்கப்படும் படிவத்தில், மக்களின் பிரச்னைகள் மனுவாக பெறப்பட்டு ஒப்புகை சீட்டு அளிக்கப்படும் என அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மக்களிடம் பெறப்படும் மனுக்கள் தனது முன்னிலையில் சீல் வைக்கப்படும் என்றும், மக்களின் பிரச்னைகள், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களில் தீர்க்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதிமுக அரசு, நம்பி வாக்களித்த மக்களுக்கு பல்வேறு வகைகளில் துரோகம் இழைத்து வருவதாகவும், வேலைவாய்ப்பை உருவாக்காமல் இளைஞர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கி வைத்துள்ளதாகவும் விமர்சனம் செய்துள்ளார். திமுக சார்பில், 10,600 மக்கள் சபை கூட்டங்கள் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், 21000 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் மக்கள் குறைகளை தெரிவிக்க http://www.stalinani.com என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் 9171091710 என்ற தொலைபேசி எண்ணிலும் குறைகளை தெரிவிக்கலாம் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.