திருப்பூரில் நடைபெற்ற நான்காவது குடிநீர் திட்ட சோதனை ஓட்டம்!

திருப்பூரில் நான்காவது குடிநீர் திட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாநகரின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கக் கூடிய வகையில், மேட்டுபாளையத்தில் இருந்து ‘நான்காவது குடிநீர் திட்டம்’ கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்…

திருப்பூரில் நான்காவது குடிநீர் திட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாநகரின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கக் கூடிய வகையில்,
மேட்டுபாளையத்தில் இருந்து ‘நான்காவது குடிநீர் திட்டம்’ கொண்டு
வரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் சோதனை ஓட்டம், திருப்பூர்
வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வெற்றிகரமாக
நிறைவடைந்தது.

இந்நிலையில், திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு சோதனை
ஓட்டமாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து நான்காவது குடிநீர் திட்ட
குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. வெற்றிகரமாக
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, திருமலை நகர் மேல்நிலை குடிநீர்
தொட்டிக்கு கொண்டு வரப்பட்டது .

இதனை, மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் திருப்பூர் தெற்கு
தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் பூ தூவி வரவேற்றனர்.
திட்டம் முழுமை அடையும் பட்சத்தில், திருப்பூர் மாநகர மக்களுக்கு 4
நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‌

-கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.