யானை தாக்கியதில் வடமாநிலத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் உயிரிழப்பு!

கோவை அருகே  மத்திய அரசு நிறுவனத்திற்குள் வந்த காட்டு யானை தாக்கியதில், வட மாநில ஆராய்ச்சி மாணவர் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோவை, ஆனைக்கட்டி அருகே மத்திய அரசு நிறுவனமாக, சலீம் அலி…

கோவை அருகே  மத்திய அரசு நிறுவனத்திற்குள் வந்த காட்டு யானை
தாக்கியதில், வட மாநில ஆராய்ச்சி மாணவர் மருத்துவ
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை, ஆனைக்கட்டி அருகே மத்திய அரசு நிறுவனமாக, சலீம் அலி பறவைகள்
ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆராய்ச்சி படிப்புகளும் பயிற்று
விக்கப்படுகிறது. இம்மையத்தில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களை சேர்ந்தவர்கள்,
ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்கின்றனர். இருந்த போதிலும், இது யானைகள்
உட்பட பல்வேறு வனவிலங்குகள் நடமாடும் பகுதியாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் விஷால் ஸ்ரீமல்
என்பவர், நிறுவன வளாகத்திற்குள் உணவு அருந்தி விட்டு நடந்து சென்றார்.
அவரை, அவ்வழியாக வந்த ஒற்றை காட்டு யானை தாக்கியது. இதனையடுத்து, அவரது
அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விஷாலை மீட்டு, உடனடியாக கேரள
மாநில எல்லைக்குட்பட்ட கோட்டைதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக
அழைத்துச் சென்றனர்.

விபத்தில் விஷாலுக்கு மார்பெலும்பு முறிவு மற்றும் வலது கால் பகுதியில் ரத்தக்கசிவு
ஏற்பட்ட நிலையில், முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை
தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் சம்பவம் குறித்து தடாகம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர். இண்டர்ன்சிப் பயிற்சிக்காக சலிம் அலி பயிற்சி மையத்திற்கு
வந்து ஏழு நாட்களே ஆன நிலையில், ஆராய்ச்சி மாணவர் யானை தாக்கி
உயிரிந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.

-கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.